ஒடிசாவில் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஒடிசாவில் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

1 mins read
1bf1314e-fd74-48c9-bb24-b0970668a52a
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் பெய்த கனமழையால், அங்கு கங்கை நதியின் அருகே உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அவ்வாறு மூழ்கிய சாலைகளில் ஒன்றை அடையாளம் கண்டு சைக்கிள் ஓட்டுகிறார் இந்த ஆடவர். படம்: ஏஎஃப்பி -

புவ­னேஸ்­வர்: ஒடி­சா­வில் கடந்த சில நாள்­க­ளாக தொடர்­மழை பெய்து வரு­கிறது. இத­னால் மகா­நதி ஆற்­று­நீர் அமைப்­பில் ஏற்­கெனவே கடு­மை­யான வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. தண்­ணீர்ப்­பி­டிப் பகு­தி­களில் உள்ள சிற்­றூர்­கள் பெரி­ய­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பாலா­சோர் மாவட்­டத்­தில் மட்­டும் 156 சிற்­றூர்­க­ளைச் சேர்ந்த மக்­கள் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக மாநில அமைச்­சர் துகுனி சாகு தெரி­வித்­தார். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளின் எண்­ணிக்கை 9.66 லட்­சத்­தைத் தாண்­டி­யுள்­ளது என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மாநி­லத்­தின் வடக்குப் பகு­தி­யில் கன­மழை பெய்து வரு­கிறது. இத­னால் ஆறு­களில் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­யில், ஜார்­கண்­டில் உள்ள நீர்த் தேக்­கங்­களில் இருந்­தும் அதிக அளவு தண்­ணீர் திறந்து விடப்­பட்டு உள்­ளது. இத­னால் ஒடி­சா­வில் ஓடும் முக்­கி­ய­மான ஆறு­களில் அபாய அளவைக் கடந்து தண்­ணீர் செல்­கிறது. குறிப்­பாக சபர்­ந­ரேகா ஆற்­றில் கரை­பு­ரண்டு ஓடும் வெள்­ளத்­தால் கரை­யோரப் பகு­தி­கள் அனைத்­தும் வெள்­ளத்­தில் மூழ்கி உள்­ளன. இத­னால் பாலா­சோர், மயூர்ப்­கஞ்ச் மாவட்­டங்­களில் தாழ்­வான பகு­தி­களில் வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. 100க்கும் மேற்­பட்ட சிற்­றூர்­கள் வெள்­ளத்­தில் மூழ்கிவிட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எனவே இந்த பகு­தி­களில் வசித்து வரும் 40 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட மக்­கள் நேற்று காலைக்­குள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். அவர்­கள் 227 தற்­கா­லிக மையங்­களில் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­னர். இந்த பணி­கள் தொடர்ந்து நடந்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.