நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவர் நீக்கம்

நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவர் நீக்கம்

1 mins read
e51fbd85-98e3-449e-8d80-8bf67f49fe2e
-

பெங்­க­ளூர்: கர்­நா­டக மாநி­லத்­தின் பெங்­க­ளூ­ரில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­க­ளி­டம் லஞ்­சம் வாங்­கிய மருத்­து­வரை பணி­நீக்­கம் செய்­யும்­படி உத்­த­ர­விட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் சுதா­கர் கூறி­யுள்­ளார்.

இந்த மருத்­து­வ­ம­னை­யில் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் குறை­க­ளைக் கேட்­ட­றி­வ­தற்கு நேர­டி­யாக வருகை தந்து ஆய்வு மேற்­கொண்டார் அமைச்­சர். அப்போது மருத்­து­வர் ஒரு­வர் நோயா­ளி­க­ளி­டம் லஞ்­சம் கேட்­கி­றார் என்று கிடைத்த புகாரை உட­ன­டி­யாக விசா­ரிக்­கும்­படி உத்­த­ர­விட்­டார். அத்­து­டன் விசா­ரணை முடி­யும்­வரை அந்த மருத்­து­வரை பணி­யி­டை­நீக்­கம் செய்­யு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார். நோயா­ளி­கள் தனி­யார் மருத்­து­வ­ம­னையை நாடிச் செல்­லாத வகை­யில், தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் கிடைக்­கும் அனைத்து வச­தி­களும் இங்கு கிடைக்க வழி வகை காணப்­படும் என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

அவ்­வ­கை­யில் மருத்­து­வ­மனை­யின் மேம்­பாட்­டிற்­கா­காக ரூ.5 கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.