ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், திங்கள் இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவரை இந்திய ராணுவம் சுட்டுக் கைது செய்தது. இதே ரஜோரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
1 mins read
-

