பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கௌரவிப்பது அருவருப்பான செயல்

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கௌரவிப்பது அருவருப்பான செயல்

2 mins read
8762e23b-2d49-45a4-ab30-324151c62211
-

புது­டெல்லி: பில்­கிஸ் பானு கூட்­டுப் பாலி­யல் கொடுமை வழக்­கில் தண்­டனை பெற்ற 11 பேரை குஜ­ராத் அரசு விடு­வித்­ததை எதிர்த்து தொடுக்­கப்­பட்ட வழக்கை உச்ச நீதி­மன்­றம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜ­ராத்­தில் கல­வ­ரம் வெடித்­தது. அப்­போது கர்ப்­பி­ணி­யாக இருந்த பில்­கிஸ் பானு, கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­னர். அவ­ரது குழந்தை உட்­பட குடும்­பத்­தி­னர் ஏழு பேர் வன்­மு­றைக் கும்­ப­லால் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக பலர் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது. அதன் முடி­வில் 11 பேருக்கு நீதி­மன்­றம் ஆயுள் தண்­டனை விதித்­தது.

இந்­நி­லை­யில், குற்­ற­வா­ளி­கள் 11 பேரை குஜ­ராத் அரசு கடந்த 15ஆம் தேதி விடு­தலை செய்­தது. பல்­வேறு தரப்­பி­ன­ரும் மாநில அர­சின் முடி­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் பிர­மு­கர் சுபா­ஷினி அலி உள்­ளிட்ட மூன்று பேர் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பில்­கிஸ் பானு வழக்­கின் குற்­ற­வா­ளி­களை கௌர­விப்­பது அரு­வருப்­பான செயல் என்று 11 பேருக்­கும் ஆயுள் தண்­டனை விதித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி யுடி சல்வி தெரி­வித்­துள்­ளார்.

இந்த வழக்­கில் குற்­ற­வா­ளி­களுக்கு தண்­டனை வழங்­கி­ய­தன் மூலம் தாம் ஏதும் சிறப்­பா­கச் செய்­து­விட்­ட­தா­கக் கரு­த­வில்லை என்று மும்­பை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"எனது தீர்ப்பு, எனது கடமை. கருணை அடிப்­ப­டை­யில் குற்­ற­வாளி­களை விடு­தலை செய்ய மாநில அர­சுக்கு உரிமை உள்­ளது. இது சட்­டத்­தின்­படி மாநி­லத்­திற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரம் ஆகும்.

"குற்­ற­வா­ளி­களை விடு­தலை செய்யப்பட்டதற்கான கார­ணி­கள் என்னென்ன என்பது குறித்து எனக்கு தெரி­யாது. ஆனால், குற்­ற­வா­ளி­கள் சில­ரால் கௌர­விக்­கப்­ப­டு­வது அரு­வருப்­பா­னது. குற்­ற­வா­ளி­களும் இத்­த­கைய கௌர­வங்­களை ஏற்­கக்­கூ­டாது," என்­றார் நீதி­பதி யுடி சல்வி.