ஆறாயிரம் கோடி ரூபாய் செலவில், 2,600 படுக்கைகளுடன் ஆசியாவின் ஆகப்பெரிய தனியார் மருத்துவமனை திறப்பு

ஆறாயிரம் கோடி ரூபாய் செலவில், 2,600 படுக்கைகளுடன் ஆசியாவின் ஆகப்பெரிய தனியார் மருத்துவமனை திறப்பு

1 mins read
8ac81acf-9cc2-4395-8520-75bafbe6c8c7
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றுள்ள அமிருதா மருத்துவமனையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவின் போது அவர் குத்து விளக்கு ஏற்றினார். மேலும் அம்மருத்துவ மனையில் உள்ள வசதிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.படம்: பிஐபி -

சண்­டி­கர்: ஹரி­யானா மாநி­லத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள அமி­ருதா மருத்­து­வ­ம­னையை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார்.

மாதா அமி­ரு­தா­னந்­த­மாயி அறக்­கட்­டளை சார்­பில் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் செல­வில் இந்த பல்நோக்கு மருத்­து­வ­மனை கட்­டப்­பட்­டுள்­ளது.

இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் 2,600 படுக்கை வச­தி­கள் உள்­ளன. அனைத்­து­லக தரத்­தி­லான அனைத்து மருத்­துவ வச­தி­களும் இங்­குள்­ளன. இதன் மூலம் ஆசியா­வின் மிகப்­பெ­ரிய தனி­யார் மருத்­து­வ­மனை என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளது என்று அதன் நிர்வாகத் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

இங்கு 81 வகை­யான சிறப்பு மருத்­துவ சிகிச்­சை­கள் அளிக்­கப்­படும். நவீன தொழில்­நுட்­பக் கருவி­க­ளைக் கொண்ட 64 அறுவை சிகிச்­சைக் கூடங்­கள், தீவிர சிகிச்சைப் பிரி­வு­கள் உள்­ளன. மேலும் தீவிர சிகிச்­சைப் பிரிவு­களில் 534 படுக்கை­கள் உள்­ளன.

இம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் மோடி, ஆன்­மி­க­மும் மருத்­து­வ­மும் ஒன்­றோடு ஒன்று இணைந்த நாடாக இந்­தியா திகழ்­கிறது என்­றார்.

மேலும் நவீ­ன­மும் தொழில்­நுட்­ப­மும் இணைந்த கல­வை­யால் இந்­திய சுகா­தா­ரத்­துறை நாட்டை வளர்ச்­சிப் பாதை­யில் கொண்டு செல்­லும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.