காந்தி நினைவிடத்தில் வேண்டுதல்

காந்தி நினைவிடத்தில் வேண்டுதல்

2 mins read
81b3da20-9217-493e-876f-22413c19d7dd
மகாத்மா காந்தி நினைவிடத்தில் வேண்டுதல் செய்யும் ஆம் ஆத்மி கட்சியினர். படங்கள்: புதிய தலைமுறை -
multi-img1 of 2

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைப் பிரிக்க பாஜக சதி செய்வதாக கெஜ்ரிவால் சாடல்

புது­டெல்லி: 'ஆம் ஆத்மி கட்­சி­யி­லி­ருந்து 40 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பிரிக்க பார­திய ஜனதா கட்சி (பாஜக) சதி­செய்­வ­தாக ஆம் ஆத்மி கட்­சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர­விந்த் கெஜ்­ரி­வால் குறை­கூ­றி­யுள்­ளார்.

'ஆப­ரே­ஷன் லோட்­டஸ்' என்ற பெய­ரில் பாஜக மேற்­கொள்­ளும் சதி தோல்­வி­ய­டைய வேண்­டும்' என்று திரு கெஜ்ரிவால் தலைமையில் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று மகாத்மா காந்தி நினை­வி­டத்­தில் வேண்டிக்கொண்டனர்.

டெல்­லி­யில் நேற்று திரு கெஜ்­ரி­வா­லின் இல்­லத்­தில் ஆம் ஆத்மி கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டம் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­திற்­குப் பின்­னர் பேசிய ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர் சௌரவ் பரத்­வாஜ், "மொத்­த­முள்ள 62 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களில் 50 பேர் கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­னர். வர இய­லா­த­வர்­கள் திரு அர­விந்த் கெஜ்­ரி­வா­லி­டம் தொலை­பேசி வாயி­லாக தங்­க­ளின் ஆத­ர­வைத் தெரி­வித்­த­னர். தங்­க­ளின் இறுதி மூச்­சு­வரை ஆம் ஆத்­மிக்கு உண்­மை­யாக இருப்­போம் என்று அவர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்," என்று கூறி­னார்.

கூட்­டத்­திற்­குப் பின்­னர் திரு கெஜ்­ரி­வா­லும் ஆம் ஆத்மி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் சேர்ந்து ராஜ்­காட்­டில் அமைந்­தி­ருக்­கும் மகாத்மா காந்தி நினை­வி­டத்­திற்­குச் சென்­ற­னர். அங்கே 'பாஜ­க­வின் ஆப­ரே­ஷன் லோட்­டஸ் சதி முயற்சி தோல்­வி­ய­டைய வேண்­டும்' என்று வேண்­டிக்­கொண்­ட­னர்.

அத­னை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்­வர் கெஜ்­ரி­வால், "எங்­கள் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 40 பேரை விலைக்கு வாங்க பாஜக தரப்பு முயற்சி செய்­தது. இதற்­காக 20 கோடி ரூபாய் பேரம் பேசப்­பட்­டது. இந்­நி­லை­யில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்­பி­ன­ரைக்­கூட அவர்­க­ளால் விலைக்கு வாங்க முடி­ய­வில்லை என்­ப­தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்­பிட்­டார்.

டெல்லி சட்டப்பேரவை 70 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது இதன் உறுப்பினர்களில் 62 பேர் ஆம் ஆத்மி கட்சியினர். எஞ்சிய எட்டுப் பேர் பாஜக உறுப்பினர்கள்.

இத­னால் 40 உறுப்­பி­னர்­க­ளைப் பிரிக்க பாஜக திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கட்­சித் தாவல் சட்­டத்­தினை எதிர்­கொள்­ளா­மல் 40 பேர் வரை பிரிக்­கப்­ப­ட­லாம் என்­ப­தால் பாஜக இவ்­வாறு சதி­செய்­வ­தாக ஆம் ஆத்மி வட்­டா­ரம் சாடு­கிறது.