‘தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை பணம் கொடுத்தது’

ஸ்ரீந­கர்: இம்­மா­தம் 21ஆம் தேதி பாகிஸ்­தா­னில் இருந்து இந்­திய எல்­லைக்­குள் நுழைய முயன்ற ஆட­வரை இந்­திய ராணு­வத்­தி­னர் துப்­பாக்­கிச் சூடு நடத்தி உயி­ரு­டன் பிடித்­த­னர். பின்­னர் ஆட­வ­ருக்கு மருத்­துவ சிகிச்சை அளிக்­கப்­பட்டது.

இந்­நி­லை­யில், பிடி­பட்ட ஆட­வர் பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரின் கோட்லி மாவட்­டத்­தில் உள்ள சப்ஸ்­கோட் கிரா­மத்­தில் வசிக்­கும் தபா­ரக் உசேன் என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­யில், இந்­திய ராணுவ முகாம் மீது தாக்­கு­தல் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்­ததை உசேன் ஒப்­புக்­கொண்­டார். பாகிஸ்­தான் உள­வுத்­து­றை­யைச் சேர்ந்த கர்­னல் யூனுஸ் சௌத்ரி என்­ப­வர் தனக்கு 30,000 பாகிஸ்­தான் ரூபா­யைக் கொடுத்து அனுப்­பி­ய­தாக தபா­ரக் உசேன் கூறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கடந்த மூன்று நாள்களில் பாகிஸ்­தா­னில் இருந்து ஜம்மு காஷ்­மீ­ருக்­குள் நுழைய பயங்­க­ர­வா­தி­க­ள் மேற்கொண்ட மூன்று ஊடு­ரு­வல் முயற்­சி­கள் முறி­ய­டிக்­கப்பட்­ட­தாக இந்திய ராணுவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!