புதுடெல்லி: மத்திய அரசு திருநங்கைகளுக்கு விரைவில் சுகாதாரக் காப்பீட்டு அட்டையை அறிமுகம் செய்யவிருக்கிறது.
இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு, கையெழுத்தாகியுள்ளது. திருநங்கைகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையும் தேசியச் சுகாதார ஆணையமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு, மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திருநங்கை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
அடுத்த மாதம் இந்தச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது 'ஆயுஷ்மான் பாரத் டிஜி சுகாதாரக் காப்பீட்டு அட்டை' என்று அழைக்கப்படும்.
இதன்கீழ், ஒவ்வொரு திருநங்கைக்கும் மருத்துவக் காப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் வரை நிதியளிக்கப்படும். இந்த அட்டையை வைத்துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் திருநங்கைகள் இலவச சிகிச்சை பெற முடியும்.

