இந்தியாவில் 15 விநாடிகளில் இடிக்கப்படவுள்ள ராட்சத கட்டடங்கள்

இந்தியாவில் 15 விநாடிகளில் இடிக்கப்படவுள்ள ராட்சத கட்டடங்கள்

1 mins read
1c4607cb-b9c0-4e1d-88ad-53a098caf5e6
இடிக்கப்படவுள்ள 103 உயரம் கொண்ட கட்டடங்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் இரண்டு 40-தள அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று (28 ஆகஸ்ட்) இடிக்கப்படவுள்ளன.

இதற்கு முன்பு இந்தியாவில் இவ்வளவு பெரிய கட்டடங்கள் இடிக்கப்பட்டதில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் புதுடில்லியின் வெளிப்புறப் பகுதியில் இருக்கும் குடியிருப்பு வட்டாரத்தில் இந்த இரு கட்டடங்களும் அமைந்துள்ளன.

சனிக்கிழமையன்று (27 ஆகஸ்ட்) இவற்றில் உள்ள வீடுகளிலிருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றினர்.

103 மீட்டர் உயரத்தில் இருக்கும் இக்கட்டடங்கள் 12லிருந்து 15 விநாடிகளுக்குள் இடிக்கப்படும்.

இவற்றைக் எழுப்பும்போது கட்டுமான விதிமுறைகள் மீறப்பட்டதாக இந்திய உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தது.

அதனால் கட்டடங்களை இடிக்குமாறு அது உத்தரவிட்டது.