ஆந்திராவில் நெகிழிப் பதாகைகளுக்குத் தடை

ஆந்திராவில் நெகிழிப் பதாகைகளுக்குத் தடை

2 mins read
51d559e9-f595-42fb-8441-907e8f90e5ff
ஆந்திர மாநிலத்தின் விசாகபட்டினத்தில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் மாபெரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏறக்குறைய 25,000 பேர் கலந்துகொண்டனர். படம்: தி இந்து -

கடற்கரையில் ஒரே நாளில் 76 டன் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

விசா­கப்­பட்­டி­னம்: ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள பெரிய கடற்­க­ரை­களில் ஒன்­றான விசா­கப்­பட்­டி­னம் கடற்­க­ரையை சுத்­தம் செய்­யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை நடந்­தது. அப்­போது ஒரே நாளில் 76 டன் பிளாஸ்­டிக் குப்­பை­கள் அகற்­றப்­பட்­டன.

மாவட்ட ஆட்­சி­யர் ஏ.மல்­லி­கார்­ஜுனா ஏற்­பாட்­டில் நடந்த இந்த துப்­பு­ர­வுப் பணி­யில், அர­சாங்க ஊழி­யர்­கள், மாணவர்கள், தொண்­டூ­ழி­யர்­கள், பொது­மக்­கள் என 25,000க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

பிளாஸ்­டிக் புழக்­கத்தை குறைக்­கும் நட­வ­டிக்­கையை ஆந்­திரா படிப்­ப­டி­யாக முடுக்­கிவிட்­டுள்­ளது.

அவ்­வ­கை­யில், ஆந்­தி­ரா­வில் நெகி­ழிப் பதா­கை­கள் வைப்­ப­தற்கு தடை விதிப்­ப­தாக அம்­மா­நில முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி அறி­வித்­தார்.

அர­சி­யல் கட்­சி­கள், பெரும் நிறு­வ­னங்­கள் ஆகி­யவை சாலை­களில் நெகி­ழிப் பதா­கை­கள் நிறு­வி­யுள்­ளன. இனி இது­போன்ற பதா­கை­கள் துணி அல்­லது அட்டை போன்­ற­வற்­றால் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படும்.

ஆந்­திர மாநி­லத்­தில் கட­லில் கலந்த பிளாஸ்­டிக் கழி­வு­களை அகற்றி சுத்­தம் செய்­வ­தற்­கான ஒப்­பந்­தம் ஒன்­றில், பார்லே என்­னும் நிறு­வ­னத்­து­டன் வெள்­ளிக்­கி­ழமை ஆந்­திர அரசு கையெ­ழுத்­திட்­டது. இந்­நி­கழ்ச்­சி­யில் முதல்­வர் ஜெகன்­மோ­கன் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

அப்­போது அவர், "வரும் 2027ஆம் ஆண்­டுக்­குள் நெகி­ழித் தயா­ரிப்­பு­களையும் பயன்பாட்டையும் முற்­றி­லு­மாக தடை செய்த மாநி­ல­மாக ஆந்­திரா திகழ வேண்­டும். இது­தான் நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­குக் கொடுக்­கும் சொத்து.

"அடுத்த தலை­மு­றை­யி­ன­ரின் உடல் நல­னில் நாம் அக்­கறை கொள்­வது அவ­சி­யம்" என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"முன்­ன­தாக திரு­ம­லை­யில் நெகி­ழிப் பயன்­பாட்­டைக் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அது நல்ல பயன் தந்­துள்­ளது. அதை­ய­டுத்து இப்­போது திருப்­பதி நக­ரி­லும் நெகி­ழிப் பொருட்­க­ளுக்­குத் தடை விதித்து மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன் அத­னைத் தீவி­ர­மாக அமல்­ப­டுத்தி வரு­கிறது திருப்­பதி மாந­க­ராட்சி. இவ்­வாறு படிப்­ப­டி­யாக ஆந்­திர மாநி­லம் முழு­மைக்­கும் நெகி­ழிப்­பயன்­பாட்­டின் ஆதிக்­கத்தை முற்­றி­லும் ஒழித்­துக்கட்ட வேண்­டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார்