புதுடெல்லி: டெல்லி அரசை நிலைகுலையச் செய்ய என்னதான் சோதனை மேற்கொண்டாலும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக எவ்விதத் தடயமும் சிக்கப்போவதில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். மதுபானக் கடை உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக துணை முதல்வர் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ கடந்த 19ஆம் தேதி சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது என்று சிசோடியா உள்ளிட்ட 15 பேரின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், சிசோடியா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய மணிஷ் சிசோடியா, "கலால் கொள்கையை அமல்படுத்தியது தொடர்பாக என் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை போலியானது. எனது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை," என்றார் சிசோடியா. வேறொன்றுமில்லை. பாஜக விருப்பப்படி சிபிஐ செயல்படுகிறது. ஆம் ஆத்மி அரசுகளின் குறிப்பாக கல்வித் துறையின் செயல்பாடுகளால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது," என்றார் சிசோடியா.
'என்னதான் சோதனை நடத்தினாலும் சிபிஐ-க்கு எதுவும் கிடைக்காது'
1 mins read
-

