சிறுதானியங்கள் பற்றி பேசிய பிரதமர் மோடி

சிறுதானியங்கள் பற்றி பேசிய பிரதமர் மோடி

1 mins read
a65025c8-433f-41fa-a86a-abf486f6a269
-

புதுடெல்லி: தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சிறு தானியத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். "நமது வேதங்களில் தினை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப்போலவே புறநானூறு, தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்த முயற்சியை வெற்றி பெறச்செய்வதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும். உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இதயம் தொடர்பான நோய்கள் அபாயமோ, இவற்றை சிறு தானியங்கள் குறைக்கின்றன. ஊட்டச்சத்துக் குறை பாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமாக உதவி புரிகின்றன," என்றார் பிரதமர் மோடி