ஒன்பது விநாடிகளில் தரைமட்டமான இரட்டை அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம்

ஒன்பது விநாடிகளில் தரைமட்டமான இரட்டை அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம்

2 mins read
60b7257b-b4ee-4333-b00a-7e629c06febc
இரட்டைக் கோபுரக் கட்டடம்(மேல் படம்) விதி முறைகளை மீறி கட்டப் பட்டதால் நேற்று தரைமட்டமாக இடிக்கப்பட்டது (இடம்). -

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

நொய்டாவில் கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி கட்டடம் நேற்று மதியம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் தரைமட்டமானது.

முன்­ன­தாக பிற்­ப­கல் 2.15 மணி­யி­லி­ருந்து 2.45 மணி வரை நொய்டா நெடுஞ்­சாலை போக்­கு­வ­ர­வுக்கு மூடப்­பட்­டது. ஏறக்­கு­றைய 500 காவ­லர்­கள் பாது­காப்­புக்கு நிறுத்­தப்­பட்­ட­னர். அந்­தப் பகு­தி­யில் விமா­னங்­கள் பறக்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டது

இந்த நிலை­யில் துல்­லி­ய­மாக பிற்­ப­கல் 2.30 மணிக்கு வானு­யர காட்­சி­ய­ளித்த இரட்டை அடுக்­கு­மாடிக் கட்­ட­டம் சில நொடி­களில் தரை­மட்­ட­மா­னது.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தின் நொய்­டா­வில் 'சூப்­பர் டெக்' என்ற நிறு­வ­னத்­தின் சார்­பில் பிரம்­மாண்ட இரட்டை கோபுர குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்­டன. இதில் 'அபெக்ஸ்' எனும் கோபு­ரம் 32 மாடி­களைக் கொண்­டது. இதன் உய­ரம் 328 அடி. மற்­றொரு கோபு­ரத்­தின் பெயர் சியான். இது, 31 மாடி­களை உடை­யது. உய­ரம் 318 அடி. இந்த இரட்டை கோபு­ரங்­கள் கட்­டு­மான விதி­மு­றைகளை மீறி கட்­டப்­பட்­ட­தாக வழக்கு தொடுக்­கப்­பட்­டது. புவி­யி­யல் சார்ந்து கட்­டப்­ப­ட­வில்லை என்­றும் புகார் எழுந்­தது.

சுமார் 7,000 பேர் தங்­கும் வசதி கொண்ட இந்த குடி­யி­ருப்­பில் இது­வரை யாரும் குடி­யே­ற­வில்லை.

இது தொடர்­பான வழக்கு உச்ச நீதி­மன்ற விசா­ர­ணைக்கு வந்த நிலை­யில் கடந்­தாண்டு கட்­ட­டங்­களை வெடி­வைத்து தகர்க்க உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதை வெடி­வைத்து தகர்க்­கும் பணியை 'எடி­பைஸ் இன்­ஜி­னி­ய­ரிங்', தென் ஆப்­பி­ரிக்­கா­வைத் தள மாகக் கொண்ட 'ஜெட் டெமாலி ஷன்ஸ்' ஆகிய தனி­யார் நிறு­வ­னங் களின் நிபு­ணர்­கள் அடங்­கிய கூட்டுக்குழு­ செயல்படுத்தியது.

அதன்­படி நேற்று மதி­யம் 2.30 மணிக்கு இரட்டை கோபு­ரக் கட்­ட­டம் இடிக்­கப்­பட்­டன.

கட்­ட­டத்தை இடிப்­ப­தற்­காக சுமார் 3,700 கிலோ வெடி­பொ­ருள்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

கட்­ட­டம் இடிந்து சரிந்­த­போது புழு­தி­யால் அப்­ப­குதி முழு­வ­தும் புகை மண்­ட­ல­மாக காட்­சி­ய­ளித்­தது. இரட்டை கோபு­ரத்­தின் கட்­டு ­மானச் சேதங்­களை எடுத்­துச் செல்ல மட்டும் 1,200 லாரி­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்தக் கட்­டு­மா­னத்­தின் மதிப்­பீடு சுமார் 300 கோடி ரூபாய் என கூறப் ­ப­டு­கிறது. இரு கட்­ட­டங்­களை இடிக்­கும் பணி­க­ளுக்­காக சுமார் 20 கோடி ரூபாய் ($349,000) செலவு செய்­யப்­பட்­டது.