நடிகை சோனாலி போகட் மரண வழக்கில் மேலும் ஒருவர் கைது

நடிகை சோனாலி போகட் மரண வழக்கில் மேலும் ஒருவர் கைது

2 mins read
e054f21f-86c3-4d5b-a242-df5b58c03ab6
நடிகை சோனாலி போகட். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

பனாஜி: நடி­கை­யும் பாஜக மூத்த தலை­வ­ரு­மான சோனாலி போகட், 43, மரண வழக்­கில் 5வது நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

ஹரி­யானா மாநி­லத்­தைச் சேர்ந்த சோனாலி போகட், கடந்த சில நாள்­க­ளுக்கு முன்பு உத­வி­யா­ளர் மற்­றும் நண்­ப­ரு­டன் கோவா­வுக்கு சுற்­றுலா சென்­றி­ருந்­தார்.

ஆனால் சுற்­றுலா சென்ற மறு­நாளே மர்­ம­மான முறை­யில் அவர் உயி­ரி­ழந்­தார். முத­லில் மார­டைப்­பால் அவர் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் அவ­ரின் குடும்­பத்­தி­ன­ரும் உற­வி­னர்­களும் சோனாலி போகட்­டின் மர­ணத்­தில் மர்­மம் இருப்­ப­தாக காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். இத­னால் சோனாலி போகட் கொலை செய்யப்­ பட்­டி­ருக்­க­லாம் என்ற கோணத்­தில் காவல்­து­றை­யின் விசா­ர­ணை தொடங்கியது.

கோவா­வில் உள்ள ஒரு கிளப்­பில் நடிகை சோனாலி போகட், அவ­ரது உதவியாளர் சுதிர் சங்­வான் மற்­றும் சுக்­விந்­தர் சிங் ஆகி­யோர் ஒன்­றாக இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அங்கு இரு­வ­ரும் குளிர்­பானத்தை நடிகை சோனாலி போகட்­டிற்கு வற்­பு­றுத்தி வழங்­கி­யது கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதிவான காட்­சிகள் காட்­டின.

இதை­ய­டுத்து சுதிர் சங்­வான், சுக்­விந்­தர் சிங் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் அவர்­கள் இரு­வ­ரும், குளிர்பானத்­தில் போதைப்­பொ­ருள் கலந்து சோனாலி போகட்­டிற்கு வழங்­கி­யது தெரிய வந்தது.

இதற்கிடையே வெளி­யான பிரே­தப்பரி­சோ­தனை அறிக்­கை­யில் சோனாலி உட­லில் ரத்த காயங்­கள் இருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னால் சோனாலி போகட் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கம் வலுத்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் தத்தா பிர­சாத் காவங்­கர் மற்­றும் கர்­லீஸ் உணவு விடுதி உரி­மை­யா­ளர் எட்­வின் நூனெஸ் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­னர். தற்­போது போதைப் பொருள் விற்­பனை செய்­யும் ரமா மந்த்­ரேக்­கர் என்­ப­வ­ரை­யும் காவல் துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே இந்த வழக்கை சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைக்க தயார் என்று ஹரி­யானா முதல்­வர் அறி வித்­துள்­ளார்.