துபாயின் ஆக விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்தியர்

துபாயின் ஆக விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்தியர்

1 mins read
68ced672-11c4-4698-818d-16fecf43df46
படம்: இந்திய ஊடகம் -

துபாயின் ஆக சொகுசு வட்டாரமானது பாம் ஜுமேரா பகுதி. இந்த பகுதியில் ஒரு மிகப் பெரிய வீட்டை வாங்கியுள்ளார் உலகச் செல்வந்தர்களில் ஒருவரான முகே‌ஷ் அம்பானி. இந்த வீட்டின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர். இதுவே துபாயின் ஆக விலையுயர்ந்த வீடாகக் கருதப்படுகிறது. தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக இதை அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது.

கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த மாளிகையில் 10 அறைகள் உள்ளன. உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் நீச்சல்குளங்கள் இருக்கின்றன. மேலும் இந்த வீட்டில் பல அதிநவீன வசதிகளும் இருப்பதாகக் கூறப்பட்டது

மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு சொர்க்கப் பூமியாக துபாய் உருவாகிவருகிறது. பணக்காரர்களை துபாய்க்கு ஈர்க்க அவர்களுக்கு சிறப்பு விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு அவர்கள் வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் அதிகம் இல்லை.

பிரிட்டி‌ஷ் காற்பந்து வீரர் டேவிட் பெக்கம், போலிவூட் நடிகர் ‌ஷாருக் கான் ஆகியோர் பாம் ஜுமேரா பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார் முகே‌ஷ் அம்பானி. இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 93.3 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.