'செய்தித்துறையின் தரம் செவ்வனே தொடரும்'

'செய்தித்துறையின் தரம் செவ்வனே தொடரும்'

2 mins read
19b2c86c-25dc-4ec7-8c5a-42dcce449257
இந்தியாவில் 34 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட முதல் தனியார் செய்தி ஒளிவழி 'என்டிடிவி'. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: 'என்­டி­டிவி' எனப்­படும் 'நியூடெல்லி டெலி­வி­ஷன்' ஊடக நிறு­வ­னத்தை, இந்­தி­யா­வின் பெரும் பணக்­கா­ரர்­களில் ஒரு­வ­ரான கௌதம் அதானி கைய­கப்­ப­டுத்­த­வி­ருப்­ப­தாக வெளி­யான தக­வல் நாட்­டில் வருங்­கால செய்­தித்­து­றைச் சுதந்­தி­ரம் குறித்த கவ­லையை எழுப்­பி­யுள்­ளது.

இம்­மா­தம் 23ஆம் தேதி அதானி குழு­மம், 'என்­டி­டிவி' நிறு­வ­னத்­தின் 29.18 விழுக்­காட்­டுப் பங்­கு­களை வாங்­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தது. விரை­வில் மேலும் 26 விழுக்­காட்­டுப் பங்­கு­க­ளுக்கு விண்­ணப்­பிக்க இருப்­ப­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

செய்­தித்­து­றை­யைச் சேர்ந்த பிர­ணாய் ராய், ராதிகா ராய் தம்­பதி 1988ஆம் ஆண்­டில் 'என்­டி­டிவி' எனும் தனி­யார் செய்தி ஒளி­வ­ழி­யைத் தொடங்­கி­னர். இந்­தி­யா­வில் தொடங்­கப்­பட்ட முதல் தனி­யார் செய்தி ஒளி­வழி என்ற பெருமை இத­னைச் சாரும்.

தற்­போது ராய் தம்­ப­திக்கு நிறு­வ­னத்­தில் 32.26 விழுக்­காட்­டுப் பங்­கு­கள் உள்­ளன. அதானி குழு­மம் நிறு­வ­னத்­தைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு இவர்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­ற­னர். ஆனால் சட்ட ரீதி­யாக இது அடிப்­ப­டை­யற்ற எதிர்ப்பு என்­கிறது அதானி குழு­மம்.

திரு அதானி ஏலத்­தில் வெற்றி­பெற்­றால் 'என்­டி­டிவி' நிறு­வ­னத்­தின் பெரும்­ப­குதி அவ­ரது கட்­டுப்­பாட்டில் வந்­து­வி­டும்.

இந்­நி­லை­யில், பெரிய நிறு­வ­னங்­கள் அவற்­றின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் ஊட­கங்­களை வர்த்­தக லாபத்­துக்­குப் பயன்­படுத்­து­வது இயல்பு என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். ஆளுங்­கட்சி­யு­டன் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வர்­க­ளின் நிறு­வ­னங்­கள் ஊட­கங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­தும்­போது ஊடக சுதந்­தி­ரம் குறித்த கவலை எழு­வது வழக்­கம் என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

ஊட­கத் துறை­யி­லும் 'என்­டி­டிவி' நிர்­வா­கம் கைமா­று­வது குறித்த தக­வல் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­ உள்ளது. பல்­வேறு துறை­களில் இனி நியா­ய­மான தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­டு­வதை எதிர்­பார்க்க இய­லாது என்று பல­ரும் கருத்­து­ரைத்­துள்­ள­னர். ஆனால் தங்­கள் நிர்­வா­கத்­தின்­கீழ் செய்­தித்­து­றை­யின் தரம் செவ்­வனே தொட­ரும் என்று அதானி குழு­மம் உறு­தி­ அ­ளித்­து உள்­ளது.