செப்டம்பர் 2ல் சேவையில் இணைகிறது உள்நாட்டுத் தயாரிப்பான 'ஐஎன்எஸ் விக்ராந்த்'

செப்டம்பர் 2ல் சேவையில் இணைகிறது உள்நாட்டுத் தயாரிப்பான 'ஐஎன்எஸ் விக்ராந்த்'

1 mins read
8ee29194-e950-4304-acaf-667258234807
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் பலமுறை கடற்பரப்பில் சோதிக்கப்பட்டது. படம்: இந்தியக் கடற்படை/ஃபேஸ்புக் -

புது­டெல்லி: உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட முதல் விமா­னந்­தாங்­கிக் கப்­ப­லான ஐஎன்­எஸ் விக்­ராந்த், அடுத்த மாதம் 2ஆம் தேதி நாட்டுக்கான தற்காப்புச் சேவை­யில் இணைந்­து­கொள்­ளும் என்று இந்­தி­யக் கடற்­படை அறி­வித்­து உள்ளது.

ஏற்­கெ­னவே ரஷ்­யா­வி­ட­மி­ருந்து வாங்­கப்­பட்ட 'ஐஎன்­எஸ் விக்­ர­மா­தித்­யா' கப்பலையும் சேர்த்து தற்­போது இந்­தி­யா­வி­டம் இரண்டு விமா­னந்­தாங்­கிக் கப்­பல்­கள் உள்­ளன. கடந்த ஜூன் மாதம் சீனா அதன் மூன்­றா­வது விமா­னந்­தாங்­கிக் கப்­பலை அறி­மு­கப்­ப­டுத்­திய நிலை­யில், 'ஐஎன்­எஸ் விக்­ராந்த்' இந்­தி­யா­வின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

'ஐஎன்­எஸ் விக்­ராந்த்', 262 மீட்­டர் நீள­மும் 62 மீட்­டர் அக­ல­மும் 43,000 டன் எடை­யும் கொண்­டது.

இந்­தக் கப்­ப­லைக் கட்­டும் பணி­கள் 2009ஆம் ஆண்டு தொடங்­கின. பின்­னர் 2013ல் அறி­மு­கம் செய்­யப்­பட்ட 'ஐஎன்­எஸ் விக்­ராந்த்', சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பலமுறை கடற்­ப­ரப்­பில் சோதிக்­கப்­பட்­டது.

அடுத்த மாதம் 2ஆம் தேதி இதனை நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கும் நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் நரேந்­திர மோடி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொள்­வார்.

'ஐஎன்­எஸ் விக்­ராந்த்' கப்­பல், 'மிக்-29' ரகப் போர் விமா­னங்­களைப் போன்ற 30 விமா­னங்­களை ஏந்­திச் செல்­லும் ஆற்­றல் கொண்­டது. நவம்­பர் மாதம் முதல் விமா­னங்­கள் இந்­தக் கப்­ப­லில் இருந்து கிளம்­பிச் சென்று மீண்­டும் இறங்­கும் சோத­னை­கள் நடத்தப்படும் என்று கூறப்­பட்­டது.