திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார்.
கேரள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 4,000 ரூபாய் ஓணம் பண்டிகை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
ஊக்கத்தொகைக்குத் தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2,750 ரூபாய் ஓணம் பண்டிகை சிறப்புப் படித்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் சுமார் 13 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவிருக்கிறது.

