நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் கெஜ்ரிவால்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் கெஜ்ரிவால்

1 mins read
75899682-3dd7-4e65-8511-0261d89560f6
-

புது­டெல்லி: டெல்லி முதல்­வர் அர்­விந்த் கெஜ்­ரி­வால் (படம்), சட்­டப் பேர­வை­யில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­புத் தீர்­மா­னத்­தைக் கொண்டுவந்­துள்­ளார்.

இதன் மூலம் தங்­கள் கட்­சி­யில் இருந்து ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கூட கட்சி மாற­வில்லை என்­பதை நிரூ­பிக்க விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

பார­திய ஜன­தாக் கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்க முயற்சி செய்­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில் இந்த வாக்­கெ­டுப்பு இன்று நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

பாஜ­க­வின் 'ஆப்­ப­ரே­ஷன் லோட்­டஸ்' தோல்­வி­யுற்­ற­தா­கக் கூறிய கெஜ்­ரி­வால், ஊழ­லுக்கு எதி­ரா­ன­தா­கத் தன்­னைக் கூறிக்­கொள்­ளும் பாஜக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை வாங்­க முயல்வது ஊழல் நடவடிக்கை என்­ப­தைச் சுட்­டி­னார்.