புதுடெல்லி: ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணியுடன் பொருதிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். இந்தியா வெற்றிபெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார்.
அவ்வேளையில் ஜெய்ஷாவின் கையில் தேசியக் கொடியைக் கொடுக்க முனைந்தார் ஆடவர் ஒருவர். ஆனால் ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுத்துவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா, வெற்றிக் கொண்டாட்ட நேரத்தில் தேசியக் கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

