மும்பை: மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் 'கிங்ஸ் சர்க்கிள்' பகுதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா 316.4 கோடி ரூபாய்க்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தங்க, வெள்ளி நகைகள், பந்தல், மண்டபம் ஆகியவற்றோடு தொண்டூழியர்கள், ,அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆகியோருக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஆக அதிகமான தொகைக்கு இந்த விழா காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

