பாகிஸ்தானுக்கு உதவுவது குறித்து மோடி ஆலோசனை

பாகிஸ்தானுக்கு உதவுவது குறித்து மோடி ஆலோசனை

1 mins read
a30087b8-510a-4c4b-a682-81acc72aaf33
-

புது­டெல்லி: பாகிஸ்­தா­னில் வெள்­ளத்­தால் ஏற்­பட்­டுள்ள சேதம் குறித்­துத் தாம் ஆழ்ந்த வருத்­த­ம­டை­வதாக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

வெள்­ளத்­தில் மாண்­ட­வர்­கள், காய­ம­டைந்­தோ­ரின் குடும்­பங்­களுக்கு இரங்­கல் தெரி­வித்து அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

இந்­நி­லை­யில், பாகிஸ்­தா­னுக்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வது குறித்து மத்­திய அர­சாங்­கம் ஆலோ­சனை நடத்­து­வ­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

பாகிஸ்­தான் இது­வரை அதி­கா­ர­பூர்­வ­மாக இந்­தி­யா­வி­டம் உதவி கோர­வில்லை. இந்­தி­யா­வில் இருந்து உண­வுப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­வது குறித்து பாகிஸ்­தா­னிய நிதி­ய­மைச்­சர் கோடி காட்­டி­ய­தாக 'ஜியோ நியூஸ்' செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

இதற்கு முன்­னர் பாகிஸ்­தான் 2010ஆம் ஆண்டு பெரும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­போ­தும் 2005ல் பாகிஸ்­தா­னில் நில­ந­டுக்­கம் உலுக்­கி­ய­போ­தும் இந்­தியா நிவா­ரண உதவி வழங்­கி­யி­ருக்­கிறது.

பாகிஸ்தானில் விரைவில் வழக்கநிலை திரும்புமென்று தாம் நம்புவதாகத் திரு மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.