பயணச்சீட்டை ரத்து செய்வதற்கும் இனி 'ஜிஎஸ்டி'

பயணச்சீட்டை ரத்து செய்வதற்கும் இனி 'ஜிஎஸ்டி'

1 mins read
7afec12c-2056-4817-8aec-9321bbdf9602
-

புதுடெல்லி: ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த பயணச் சீட்டை ரத்து செய்வதற்கும் இனி பொருள், சேவை வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்தால் இதுவரை இழப்பீட்டுக் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. இனி அதற்கு ஐந்து விழுக்காடு 'ஜிஎஸ்டி' சேர்த்து வசூலிக்கப்படும்.

குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சீட்டுகளுக்கு மட்டும் இது பொருந்தும்.