கோலாகலமாகத் தொடங்கிய ஹரிவராசனம் நூற்றாண்டு விழா

கோலாகலமாகத் தொடங்கிய ஹரிவராசனம் நூற்றாண்டு விழா

1 mins read
de1915f3-3545-4872-a778-96859c88b445
-

பந்­த­ளம்: கேரள மாநி­லத்­தின் பந்­த­ளம் நக­ரில் ஹரி­வ­ரா­ச­னம் நூற்­றாண்டு விழா நேற்று முன்தினம் தொடங்­கி­யது.

சப­ரி­ம­லை­யில் பணி­யாற்­றிய அனந்­த­கி­ருஷ்­ணன் என்­ப­வ­ரின் மகள் ஜான­கி­யம்­மாள், 1923ஆம் ஆண்டு இந்­தப் பாடலை இயற்­றி­னார். ஐயப்­ப­னைத் துதிக்­கும் இப்­பா­டல் பின்­னர் திரை­யி­சைப் பாட­கர் கே.ஜே. ஏசு­தா­சின் குர­லில் இசைத்­தட்­டாக வெளி­யா­னது.

அதன் பின்­னர், பல ஆண்­டு­களாக ஐயப்­பன் சந்­நி­தி­யில் நடை அ­டைக்­கும்­போது இந்த இசைத்­தட்டை ஒலிக்­க­வி­டு­வது வழக்­க­மா­கப் பின்­பற்­றப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஹரி­வ­ரா­ச­னம் பாடல் இயற்­றப்­பட்டு நூறு ஆண்டு­கள் நிறை­வ­டைந்­த­தைக் கொண்­டா­டத் தீர்­மா­னித்­தது சப­ரி­மலை ஐயப்ப சேவா சமா­ஜம். விழாக் குழு­வின் அனைத்­து­ல­கத் தலை­வ­ராக இசை­ஞானி இளை­ய­ராஜா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

தொடக்க விழா­விற்கு பந்­தள மன்­னர் குடும்­பத்­தின் சசி குமா­ர­வர்மா தலைமை வகித்­தார். ஹரி­வ­ரா­ச­னம் நுாற்றாண்டு விழாக் கொண்­டாட்­டங்­களை நாடு முழு­வ­தும் 18 மாதங்­க­ளுக்கு நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. திரு­வ­னந்­த­பு­ரத்­தில் 2024ஆம் ஆண்டு ஜன­வரி 20, 21ஆம் தேதி­களில் நடை­பெ­றும் நிறைவு விழா­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி கலந்துகொள்வார்.