ரேவா: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவியதால் ஏறக்குறைய 2,000 பன்றிகள் மாண்டுவிட்டன. இதையடுத்து அம்மாநிலத்தில் பன்றி இறைச்சி வாங்கவோ விற்கவோ கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பன்றிகள் அடுத்தடுத்து இறந்த நிலையில் அவற்றின் உடல்மாதிரிகள் கால்நடை நோய் ஆய்வு நிலையத்தில் சோதிக்கப்பட்டன. ரேவா நகரில் தற்போது இருக்கும் 25,000க்கும் மேற்பட்ட பன்றிகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 2,000 பன்றிகள் மாண்டன
1 mins read
-

