இந்தியாவில் சிங்கப்பூர் ஆடவருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

இந்தியாவில் சிங்கப்பூர் ஆடவருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

1 mins read
6f3a3c5b-af45-49a4-b984-ffd95b91f193
படம்: இணையம் -

இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 23 வயதான அலெக்சாண்டர் லீ ஜியா ஜூன் என்பவர் ஆகஸ்ட் 28 அன்று கைதுசெய்யப்பட்டதாக அஜித் வாரந்திர இதழ் குறிப்பிட்டிருந்தது.

பிரபல சுற்றுப்பயணத் தலமான மனாலியில் சம்பவம் ஆகஸ்ட் 26 அன்று நடந்தது. 38 வயதான ரஷ்யப் பெண்ணை லீ பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்துக்காக லீ மனாலிக்கு ஜூலை மாதம் சென்றதாகக் கூறப்பட்டது. அங்கு வசித்துவந்த ரஷ்யப் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. லீ தான் தங்கியிருந்த விடுதிக்கு தன்னை அழைத்ததாகவும் அறைக்கு சென்றதும் லீ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர், ரஷ்ய தூதரகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.