கடற்படைக்குப் புதிய கொடி

கடற்படைக்குப் புதிய கொடி

1 mins read
c69b8cd3-9ae9-4599-8ec2-8ed51b8d3523
இந்தியக் கடற்படையின் தற்போதைய கொடி. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யக் கடற்­ப­டைக்­குப் புதிய கொடி விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் அலு­வ­ல­கம் இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.

உள்­நாட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்ட முதல் விமா­னந்­தாங்­கிக் கப்­ப­லான 'ஐஎன்­எஸ் விக்­ராந்த்' நாட்­டிற்கு அர்ப்­ப­ணிக்­கப்­படும் நாளில் கடற்­படைக்­கான புதிய கொடி­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கிறது.

இந்தியத் தற்காப்புத் துறையின் தற்சார்பைக் குறிக்கும் அடையாளம் என்று வருணிக்கப்படும் 'ஐஎன்­எஸ் விக்­ராந்த்' கப்பலைப் பிரதமர் மோடி நாளை கேரளாவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

அந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடற்படையின் புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்துவார். இதில் காலனித்துவ ஆட்சி தொடர்பான அம்சம் இனி இடம்பெறாது எனக் கூறப்பட்டது.

இந்தியக் கடற்படையின் தற்போதைய கொடியில் 'செயிண்ட் ஜார்ஜ்' சிலுவை, அதன் நடுவில் தேசியச் சின்னம், இடது மேற்புறத்தில் தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.