அரவிந்த் கெஜ்ரிவாலைச் சாடிய அன்னா ஹசாரே

அரவிந்த் கெஜ்ரிவாலைச் சாடிய அன்னா ஹசாரே

2 mins read
f80e04f4-e234-46f2-a4b6-de782ae33def
-

புது­டெல்லி: டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் அதி­கார போதைக்கு அடி­மை­யா­கி­யி­ருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர் அன்னா ஹசாரே (படம்) சாடி­யுள்­ளார்.

திரு கெஜ்­ரி­வா­லுக்கு எழு­திய கடி­தத்­தில் அவர் இவ்­வாறு குறை­கூ­றி­யுள்­ளார். கடி­தத்­தில், திரு கெஜ்­ரி­வால் எழு­திய 'சுவ­ராஜ்' எனும் நூலுக்­குத் தாம் முன்­னுரை வழங்­கி­யதை அவர் சுட்­டி­யுள்­ளார்.

"நூலில் நீங்­கள் மது ஒழிப்பை ஆத­ரித்து எழு­தி­யி­ருந்­தீர்­கள். அத­னால் அனை­வ­ரும் உங்­கள்­மீது நம்­பிக்கை வைத்­தார்­கள். ஆனால் முதல்­வர் பத­விக்கு வந்த பிறகு இந்­தக் கொள்­கையை நீங்­கள் மறந்து­விட்­டது போலத் தெரி­கிறது. டெல்லி அர­சின் புதிய மதுக் கொள்கை இதைக் காட்­டு­கிறது.

இந்­தப் புதிய கொள்கை மது விற்­ப­னை­யை­யும் மது அருந்­து­வ­தை­யும் ஊக்­கு­விக்­கிறது. எந்த இடத்­தி­லும் மது­பா­னக் கடை­களைத் திறப்­பது இத­னால் சாத்­தி­ய­மா­கும், ஊழலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இந்­தக் கொள்கை மக்­களுக்கு நன்மை விளை­விக்­காது.

மக்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் தீங்கு விளை­விக்­கும் இந்­தக் கொள்கை, உங்­கள் சொல்­லுக்­கும் செய­லுக்­கும் தொடர்பு இல்லை என்­ப­தைக் காட்­டு­கிறது," என்று திரு ஹசாரே தமது கடி­தத்­தில் கூறி­யுள்­ளார்.

ஒரு பேரி­யக்­கத்­தில் விளைந்த கட்­சிக்கு இது அழகா என்ற கேள்­வி­யை­யும் அவர் தமது கடி­தத்­தில் முன்­வைத்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

அர­விந்த் கெஜ்­ரி­வால் கடந்த 2011ஆம் ஆண்டு அன்னா ஹசா­ரே­வு­டன் இணைந்து ஊழ­லுக்கு எதி­ரான போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர். திரு கெஜ்­ரி­வால் அதி­கார போதை­யில் மிதப்­ப­தா­கத் திரு ஹசாரே குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

திரு ஹசா­ரே­வின் விமர்­ச­னத்­திற்கு முதல்­வர் கெஜ்­ரி­வால் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

புதிய மது­பா­னக் கொள்­கை­யில் முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தா­கக் கூறி டெல்லி துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா வீட்­டில் நடத்­தப்­பட்ட 'சிபிஐ' சோத­னை­யில் எது­வும் கிடைக்­கா­த­தால் பார­திய ஜன­தாக் கட்சி அன்னா ஹசா­ரே­வைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கத் திரு கெஜ்­ரி­வால் கூறி­னார்.

புகழ்பெற்ற ஒருவரை வைத்துத் தனிநபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் வழக்கமான நடவடிக்கைதான். அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி பாஜக இப்போது அதைப் பின்பற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில் நடைபெறும் பனிப்போரில் முதல்வர் கெஜ்ரிவாலைக் குறைகூறி திரு ஹசாரே எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.