தலைநகரில் திறக்கப்பட்ட நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளி

தலைநகரில் திறக்கப்பட்ட நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளி

1 mins read
cf46dd88-e642-40f6-87e6-3a35ebc5c07e
-

புது­டெல்லி: நாட்­டின் முதல் மெய்­நி­கர் பள்­ளியை டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் நேற்று தொடங்கி வைத்­தார்.

பள்­ளிக்கு வர இய­லாத மாண­வர்­கள், தொலை­தூ­ரத்­தில் இருந்து பள்ளி செல்­லும் மாண­வர்­கள் ஆகி­யோ­ரைக் கருத்­தில்­கொண்டு இத்­த­கைய பள்­ளியை அறி­மு­கம் செய்­வ­தாக அவர் கூறி­னார். டெல்லி பாடத்­திட்­டத்­தின்­கீழ் இயங்­கும் இப்­பள்­ளி­யில் நாட்­டின் எந்­தப் பகு­தி­யில் இருந்­தும் மாண­வர்­கள் பயி­ல­லாம்.