இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் சோனகியாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் மென்பொறியாளராக வேலை கிடைத்துள்ளது.
தற்போது 25 வயதாகும் இவர் தனது எட்டு வயதில் முழுவதுமாகப் பார்வையை இழந்தவர். 'பி-டெக்' பட்டப் படிப்பை முடித்துள்ள யாஷ் சோனகியா, 'ஸ்கிரீன் ரீடர்' எனும் மென்பொருளின் உதவியோடு கணினியில் மென்பொருள் உருவாக்கக் கற்றுள்ளார். தற்போதைக்கு இவர் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

