'எம்.எல்.ஏக்­களை விலைக்கு வாங்­கும் பாஜ­க­வின் முயற்சி டெல்லியில் எடுபடாது'

'எம்.எல்.ஏக்­களை விலைக்கு வாங்­கும் பாஜ­க­வின் முயற்சி டெல்லியில் எடுபடாது'

2 mins read
0eaf460f-c3d5-4580-af4d-a68f6a91e2af
-

புது­டெல்லி: டெல்­லி­யில் ஆளும் ஆம் ஆத்மி கட்­சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற்­சிப்­ப­தாக (ஆப­ரே­ஷன் லோட்­டஸ்) மத்­திய பா.ஜனதா அரசு மீது முதல் அமைச்சர் கெஜ்­ரி­வால் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

இதில் முக்­கி­ய­மாக, கலால் கொள்கை விவ­கா­ரத்­தில் சி.பி.ஐ. வழக்­கில் சிக்­கி­யுள்ள துணை முதல் அமைச்­சர் மணிஷ் சிசோ­டியா, தான் ஆம் ஆத்­மியை விட்டு வில­கி­னால் தன் மீதான வழக்­கு­கள் மீட்­கப்­படும் என பார­திய ஜனதா கட்சி கூறி­ய­தாக ஏற்­கெ­னவே அம்­ப­லப்­ப­டுத்தி இருந்­தார்.

இதைப்­போல பல சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அச்­சு­றுத்­தி­யும், பணம் கொடுத்­தும் தன் பக்­கம் இழுக்க பாஜக முயற்சி செய்­த­தாக ஆம் ஆத்மி குற்­றச்­சாட்டை கிளப்பி இருந்­தது.

சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்­படு­வ­தா­க­வும் புகார் கூறப்­பட்­டது. இதைத்­தொ­டர்ந்து தனது அர­சுக்­கான பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் வகை­யில் முதல் அமைச்­சர் கெஜ்­ரி­வால், சட்­ட­ச­பை­யின் நடப்பு கூட்­டத்­தொ­ட­ரில் நம்­பிக்கை தீர்­மா­னம் கொண்டு வந்­தார்.

அந்த வாக்­கெ­டுப்­பில் அக்­கட்­சி­யில் உள்ள 62 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களில் 58 பேர் அர­விந்த் கெஜ்­ரி­வா­ல் அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

இந்­நி­லை­யில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்­கள் யாரும் பாஜக வசம் செல்­ல­வில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக டெல்லி சட்­ட­ச­பை­யில், முதல் அமைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் நேற்று தாமாக முன்­வந்து நம்­பிக்கை வாக்கு கோரி­னார்.

எஞ்­சி­யுள்ள நான்கு பேரில் ஒரு­வர் சபா­நா­ய­கர். மற்ற மூன்று பேர் மட்­டுமே அவைக்கு வர­வில்லை.

இதன் மூலம் டெல்லி சட்­டப்­பே­ர­வை­யில் தமது அர­சுக்கு உள்ள பெரும்­பான்­மையை மீண்­டும் கெஜ்­ரி­வால் நிரூ­பித்­தார். அவைக்கு வராத 3 ஆம்­ஆத்மி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களில் இரு­வர் வெளி­நாடு சென்­றுள்­ள­தா­க­வும் ஒரு­வர் சிறை­யில் உள்­ள­தா­க­வும் கெஜ்­ரி­வால் விளக்­கம் அளித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எம்.எல்.ஏக்­களை விலைக்கு வாங்­கும் பாஜ­க­வின் முயற்சி மற்ற மாநி­லங்­களில் வேண்­டு­மா­னால் எடு­படும். ஆனால் டெல்­லி­யில் எடு­ப­டாது எனக் கூறிய முதல் அமைச்சர் அர­விந்த் கெஜ்­ரி­வால், டெல்­லி­யில் 'ஆப்ரே­ஷன் லோட்­டஸ்' தோல்வி அடைந்­து­விட்­ட­தாக தெரி­வித்­தார். துணை முதல் அமைச்­சர் மணிஷ் சிசோ­டியா வீட்­டில் சிபிஐ சோதனை நடத்­தி­ய­தற்­குப் பின்­னர் விரை­வில் சட்­ட­மன்றத் தேர்­தல் நடை­பெற உள்ள குஜ­ராத் மாநிலத்தில் ஆம்­ஆத்­மி­யின் வாக்கு 4 விழுக்­காடு வரை அதி­க­ரித்­துள்­ள­து என டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கூறி­னார்.

டெல்லி பேரவையில் நம்பிக்கை தீர்மானம் என்பது ஆம் ஆத்மி அரசின் ஊழலை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நாடகம் என்று பாஜக சாடியுள்ளது.