‘உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்’

புது­டெல்லி: மனித நேயத்­திற்­காக தங்­கள் உறுப்­பு­களைத் தானம் செய்ய மக்­கள் முன்­வ­ரு­வதை ஊக்­கு­விக்க வேண்­டும் என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­டவ்யா தெரி­வித்­துள்­ளார்.

உடல் உறுப்பு தானத்தை மக்­கள் இயக்­க­மாக மாற்ற வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"உறுப்பு தானம் செய்ய மக்­களை ஊக்­கு­விப்­பது என்­பது அர­சாங்­கத்­தாலோ அல்­லது தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளாலோ மட்­டும் சாத்­தி­ய­மா­கி­வி­டாது.

"இத்­த­கைய முயற்சி வெற்றி பெற, அது மக்­கள் இயக்­க­மாக மாற வேண்­டும்," என்று 'ஆரோக்­கி­ய­மான வலு­வான இந்­தியா' என்ற தலைப்­பில் நடை­பெற்ற மாநாட்­டைத் தொடங்கி வைத்­துப் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்­கள் இயக்­கம் வெற்றி பெற அனை­வ­ரும் உழைக்க வேண்­டும். உடல் உறுப்பு தான இயக்­கத்­தின் அனைத்து முயற்­சி­க­ளை­யும் ஆத­ரிப்­ப­தற்கு மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு முழு மன­து­டன் உறுதி பூண்­டுள்­ளது," என்­றார் மன்­சுக் மாண்­டவ்யா.

சொந்த நலனை மட்­டு­மல்ல, பொது­ந­லன் குறித்­தும் சிந்­திப்­பதே இந்­திய பாரம்­ப­ரி­யம் என்­றும் அவர் கூறி­னார். இந்­தி­யா­வில் உடல் உறுப்பு, கண் தானத்­தின் தற்­போ­தைய சூழ்­நிலை குறித்தும் எதிர்­கா­லத்­தில் வர­வி­ருக்­கும் சவால்­களுக்குத் தீர்வு காண்­பது குறித்­தும் மாநாட்­டில் விவா­திக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!