இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மேற்கத்திய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்திய பொம்மைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொம்மைகளில் இந்தியாவின் பங்கு ஒரு விழுக்காடாக உள்ளது. உலகின் முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து பொம்மைகளை வாங்க தயாராக உள்ளன. கொரோனாவுக்குப் பிறகு உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாற்றங்களை அடுத்து, இந்தியாவில் இருந்து பொம்மைகளை ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

