தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.7,183 கோடி 14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம்

1 mins read
ac8caa9c-64c3-4b8c-9d4c-a218db8f6715
-

புது­டெல்லி: மத்­திய அரசு, வரு­வாய் பற்­றாக்­குறை மானி­ய­மாக 14 மாநி­லங்­க­ளுக்கு 7,183 கோடி ரூபாயை வழங்­கி­யுள்­ளது.

2022-23 நிதி ஆண்­டுக்கு, நிதிப் பகிர்­வுக்­குப் பிந்­தைய வரு­வாய் பற்­றாக்­கு­றை­யாக 14 மாநி­லங்­க­ளுக்கு 86,201 கோடி ரூபாய் வழங்க 15வது நிதிக் குழு பரிந்­து­ரைத்­தது.

அதன்­படி, இந்­தத் தொகை 12 மாதத் தவ­ணை­யாக குறிப்­பிட்ட மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், 6வது தவ­ணை­யாக இந்த மாதத்­துக்கு உரிய 7,183 கோடி ரூபாயை மத்­திய அர­சின் செல­வி­னத் துறை வழங்­கி­யுள்­ளது.

ஆந்­தி­ரப் பிர­தே­சம், அசாம், இமாச்­ச­லப் பிர­தே­சம், கேரளா, மணிப்­பூர், மேகா­லயா, மிசோ­ரம், நாகா­லாந்து, பஞ்­சாப், ராஜஸ்­தான், சிக்­கிம், திரி­புரா, உத்­த­ர­கண்ட், மேற்கு வங்­கம் ஆகி­யவை இத­னால் பல­ன­டை­யும் 14 மாநி­லங்­கள்.

அர­ச­மைப்­புச் சட்­டம் 275ன் அடிப்­ப­டை­யில், நிதிப் பகிர்­வுக்­குப் பிந்­தைய வரு­மா­னப் பற்­றாக்­குறை மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. நடப்பு நிதி ஆண்­டுக்கு இது­வரை 43,100 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்பட்டுள்ளது.