தலைநகரில் பட்டாசுக்குத் தடை

தலைநகரில் பட்டாசுக்குத் தடை

1 mins read
bf50a477-6d29-4af3-8c88-fb8052cf843a
-

புது­டெல்லி: மத்­திய சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்­சர் கோபால்­ராய், தலைநகர்­ பு­து­டெல்­லி­யில் அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி வரை பட்­டா­சு­களை விற்­கவோ வெடிக்­கவோ சேமித்து வைக்­கவோ கூடாது என்று தடை விதித்­துள்­ளார். இந்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை அடுத்த மாதம் 24ஆம் தேதி கொண்­டா­டப்­ப­ட­வி­ருக்­கை­யில் இந்த உத்­த­ரவு வெளி­யாகி இருக்­கிறது.

இந்த ஆண்டு இணை­யத்­தில் பட்­டா­சு­களை விற்­ப­தற்­கும் நேர­டி­யாக விற்­ப­தற்­கும் அர­சாங்­கம் தடை விதிப்­ப­தாக அமைச்­சர் கோபால்­ராய் டுவிட்­ட­ரில் பதி­விட்டு உள்­ளார்.

இந்­தத் தடை­யைக் கடு­மை­யாக அம­லாக்­கும் வகை­யில், காவல்­துறை, டெல்லி மாசுக் கட்­டுப்­பாட்­டுக் குழு, வரு­வாய்த் துறை ஆகி­ய­வற்­று­டன் இணைந்து செயல்­திட்­டம் வகுக்­கப்­படும் என்­றார் அமைச்­சர். தலை­ந­க­ரில் பொது­மக்­களை மாசு அபா­யத்­தி­லி­ருந்து காப்­பது இதன் நோக்­கம்.

இந்த உத்­த­ர­வின்­கீழ், வகை­யான பட்­டா­சு­க­ளின் உற்­பத்தி, சேமிப்பு, விற்­பனை, பயன்­பாடு ஆகி­யவை டெல்­லி­யில் முற்­றி­லும் தடை­செய்­யப்­படும்.

மிக மோச­மான காற்­றுத் தூய்­மைக்­கேட்­டுப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளும் உலக நக­ரங்­களில் ஒன்று புது­டெல்லி. பட்­டாசு வெடிப்­ப­தால் அது மேலும் மோச­மா­கும் சாத்­தி­யம் அதி­கம்.