சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு விழாக்களில் மூன்று மணி நேரம் மட்டுமே ஆடிப் பாட அனுமதி

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு விழாக்களில் மூன்று மணி நேரம் மட்டுமே ஆடிப் பாட அனுமதி

2 mins read
9d81bc7a-261b-4a59-a4a7-62358ea7adbc
-

மதுரை: கோயில் திரு­வி­ழாக்­களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி­க­ளுக்கு கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்து உயர் நீ­தி­மன்ற மது­ரைக்­கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

விழா நிகழ்வுகளில் அநா­க­ரிக மான உரை­யா­டல்­கள், இரட்டை அர்த்த பாடல்­கள்; அர­சி­யல், கட்சி, சமயம், சமூ­கம், சாதி­யைக் குறிப்­பி­டும் பாடல்­கள் இடம்­பெ­றக்கூடாது எனவும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

திருச்சி, ராம­நா­த­பு­ரம், சிவ­கங்கை, புதுக்­கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்­டங்­களில், கோயில் திரு­வி­ழாக்­களில் இரவு நேரத்­தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்­சிகளை நடத்துவதற்கு அனு­மதிக்­கக் கோரி பல்வேறு மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவை அனைத்தையும் ஒன்றாக விசாரித்த நீதி­பதி சக்­தி­கு­மார் சுகு­மார குரூப், "ஆடல் பாடல் நிகழ்ச்சி களில் ஆபாச நட­னமோ, அநா­க­ரீக­மான பேச்சோ இருக்­கக்­கூடாது," என நிபந்­தனை விதித்­தார்.

"நடன நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­போர் நாக­ரி­க­மான உடை­கள் அணியவேண்­டும். இரட்டை அர்த்த பாடல்­கள் இடம்­பெ­றக் ­கூ­டாது," என­வும் ஆணை­யிட்­டார்.

ஆடல், பாடல் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ப­வர்­கள் குட்கா, மது­பா­னங்­களை உட்­கொள்­ளக்­கூ­டாது என தெரி­வித்­துள்ள உயர் நீதி­மன்­றம், பொது­மக்­க­ளுக்­கும் போக்­கு­வ­ரத்­திற்­கும் எந்­த­வித இடை­யூ­றும் ஏற்­படுத்­தக்­கூ­டாது என­வும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

கோயில் வி­ழாக்­களில் ஆடல், பாடல் நிகழ்ச்­சி­கள் இரவு 7 முதல் 10 மணிவரை மட்­டுமே நடத்தவேண்­டும் என்­றும் நீதி­பதி சக்­தி­கு­மார் நிபந்­தனை விதித்­துள்­ளார்.

கபடிப் போட்­டிக்­கும் கட்­டுப்­பாடு

இதே­போல், திரு­நெல்­வேலி மாவட்­டம், விஜய நாரா­ய­ண­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர்­கள் கபடி போட்டி நடத்த அனு­மதி கோரி தாக்­கல் செய்த மனு­வை விசா­ரித்த நீதி­பதி, கபடிப் போட்­டி­யில் பங்­கேற்கும் வீரர்­க­ளின் உடை­களில் அர­சி­யல் கட்சி சின்­னங்­கள், தலை­வர்­க­ளின் படங்­கள், சாதி ரீதி­யான அடை­யா­ளங்­கள் இருக்­கக்­கூ­டாது என்று உத்­த­ர­விட்­டார்.

கப­டிப் போட்டி நடக்­கும் இடங்­களில் மருத்­து­வர்­களும் சிகிச்­சைக்­கான உப­க­ர­ணங்­களும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதி­பதி, போட்­டி­யில் பங்­கேற்­ப­வர்­கள் போதைப்­பொ­ருளோ மதுவோ அருந்­தி­யி­ருக்­கக் கூடாது என்றும் உத்­த­ர­விட்­டார்.

நிபந்­த­னை­களை மீறுபவர்கள் மீது காவல்­துறை நடவ­டிக்­கைகள் எடுத்து போட்­டியை நிறுத்­த­லாம் என்றும் நீதி­பதி ஆணை­யிட்­டு உள்­ளார்.