பெங்களூரு வெள்ளத்தால் ரூ.2,000 கோடி இழப்பு

பெங்களூரு வெள்ளத்தால் ரூ.2,000 கோடி இழப்பு

1 mins read
c5be4229-a362-4b30-89db-eb4cd8708c3f
வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பெங்களூரில் பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியதில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். படம்: இந்திய ஊடகம் -

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரில் தென்­மேற்­குப் பரு­வ­மழை வழக்­கத்­தை­விட அதிக அள­வில் பெய்­த­தால் பெரும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

வர­லாறு காணாத பெரு­மழை நகர மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யைப் பெரி­தும் பாதித்­துள்­ளது.

இம்­மா­தம் 4ஆம் தேதி இரவு கன­மழை பெய்­த­தை­ய­டுத்து மகா­தே­வ­புரா, பொம்­ம­ன­ஹள்ளி, ஒய்ட்­ஃபீல்டு, பெல்­லந்­தூர், இந்­தி­ரா­ந­கர் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது. குடி­யி­ருப்­பு­கள் நீரில் மூழ்­கின.

சில இடங்­களில் அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­பு­களில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த விலை உயர்ந்த கார்­களும் இரு­சக்­கர வாக­னங்­களும் நீரில் மூழ்­கிச் சேத­ம­டைந்­தன.

பல கோடி ரூபாய் மதிப்­புள்ள ஆடம்­பர வீடு­களில் வசித்த பல­ரும் வீட்டை விட்­டுப் பாது­காப்­பான இடம்­தேடி வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் செயல்­படும் நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­களை வீட்­டில் இருந்து வேலை பார்க்க அறி­வு­றுத்­தின.

தற்­போது வெள்­ளம் வடிந்­துள்­ள­தால் வீடு­க­ளுக்­கும் அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் திரும்­பிய உரி­மை­யா­ளர்­கள், விலை­யு­யர்ந்த பொருள்­கள் வெள்­ளத்­தால் சேத­ம­டைந்­த­தா­கக் கூறி­னர். மொத்­தத்­தில் ரூ.2,000 கோடி அள­வுக்கு நஷ்­டம் ஏற்­பட்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. முறைப்­படி ஆய்­வு­செய்து மதிப்­பிட்­டால்­தான் சேதத்­தின் அளவு தெரி­ய­வ­ரும்.