இங்கிலாந்து அமைச்சரின் தந்தை நிலங்கள் ஆக்கிரமிப்பு

இங்கிலாந்து அமைச்சரின் தந்தை நிலங்கள் ஆக்கிரமிப்பு

1 mins read
869bfc86-5f24-4dae-a1f2-224c0e02bf99
-

பானாஜி: தனக்­குச் சொந்­த­மான நிலம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கோவா காவல்­து­றை­யி­டம் இங்­கி­லாந்­தின் புதிய உள்­துறை அமைச்­சர் சூவெல்லா பிரே­வர்­ம­னின் தந்தை கிறிஸ்டி பெர்­னாண்­டஸ் புகார் அளித்­துள்­ளார்.

இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்­னாண்­டஸ், கோவாவை பூர்­வீ­க­மா­கக் கொண்­ட­வர். அவ­ரது தாயார் உமா தமிழ்ப் பெண் ஆவார்.

கிறிஸ்டி பெர்­னாண்­ட­சின் மூதா­தை­ய­ருக்­குச் சொந்­த­மான நிலங்­கள் வடக்கு கோவா­வில் வெவ்­வேறு பகு­தி­களில் உள்­ளன.

இந்­நி­லை­யில் இரண்டு நிலங்­க­ளை­யும் சிலர் ஆக்­கி­ர­மித்­துள்­ள­தா­க­வும் 13,900 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட இந்த இரு நிலங்­க­ளை­யும் மீட்­டுத் தரக்­கோ­ரி­யும் அவர் காவல்­து­றை­யில் புகார் மனு அளித்­துள்­ளார்.

மேலும், கோவா முதல்­வர், காவல்­துறை தலை­வர், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்­கும் அவர் தனது புகார் மனு­வின் பிர­தியை அனுப்பி உள்­ளார். இதை­ய­டுத்து, வழக்­குப் பதிவு செய்­துள்ள கோவா காவல்­துறை, சிறப்பு புல­னாய்­வுக் குழுவை அமைத்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.