கேரளாவில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்

கேரளாவில் நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்

1 mins read
327878a4-bbb3-4095-92d8-4dc059d6af6a
கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ஆங்காங்கே தாம் சந்திக்கும் மாணவ மாணவியர், பெண்களிடம் சிறிது நேரம் உரையாடுகிறார். மேலும் அவர்களுடன் செல்ஃபி படமும் எடுத்துக்கொள்ள அவர் தவறுவதில்லை. அவரது இந்த அணுகுமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: காங்­கி­ரஸ் கட்சிக்கு புத்­து­யிர் ஊட்­டும் வித­மாக அக்­கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி மேற்­கொண்­டுள்ள இந்­திய ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்­துக்கு கேர­ளா­வில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­தில் தமது நடைப்­ப­ய­ணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தற்­போது கேர­ளா­வில் முகா­மிட்­டுள்­ளார். அவர் அடுத்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக அம்­மா­நி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு நடைப்­ப­ய­ணம் மேற்­கொள்­வார்.

கேர­ளா­வில் நேற்று தன் பய­ணத்­தைத் தொடங்­கிய ராகுல், அங்­குள்ள ஏழு மாவட்­டங்­க­ளுக்­குச் சென்று பொது­மக்­க­ளை­யும் கட்­சி­யி­ன­ரை­யும் சந்­தித்­துப் பேச உள்­ளார்.

முன்­ன­தாக, தமி­ழ­கத்­தில் தனது பய­ணத்தை முடித்­துக்­கொண்ட அவர், மக்­க­ளின் உழைப்­புக்­கான ஊதி­யம் கிடைக்க வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தியே தாம் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டார்.

"தமி­ழக மக்­க­ளின் நல­னில் எனக்கு தனிப்­பட்ட ஈடு­பாடு உள்­ளது. நான் பெரி­யார் மண்ணை விட்டு வருத்­தத்­து­டன் திரும்­பிச் செல்­கி­றேன். அதே­ச­ம­யம் நாரா­யண குரு பிறந்த கேர­ளத்­துக்­குள் செல்­வதை நினைத்து மகிழ்­கி­றேன். எனது நான்கு நாள் தமி­ழ­கப் பய­ணம் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது," என்­றார் ராகுல்.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் ராகு­லுக்கு சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது என்­றும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் அவரை வர­வேற்­ப­தா­க­வும் அம்­மா­நில காங்­கி­ரஸ் நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.