புதிய தேசிய கட்சி தொடங்க சந்திரசேகர ராவ் திட்டம்
ஹைதராபாத்: புதிய தேசிய கட்சியை தொடங்கப்போவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். புதிய கட்சிக்கான கொள்கைகள் வகுக்கும் பணி நடந்து வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு பல்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதில், தேசிய அளவில் மாற்றுக் கட்சி தொடங்குவது குறித்து கருத் தொற்றுமை ஏற்பட்டது. விரைவில் தேசிய கட்சி தொடங்கப் படும்," என சந்திரசேகர ராவ் அறிக்கையில் கூறியுள்ளார்.
மோடிக்கு கிடைத்த 1,200 பரிசுப் பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன
புதுடெல்லி: பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருள்கள் அனைத்தும் எதிர்வரும் 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,200க்கும் மேற்பட்ட பொருள்கள் இணையம் வழி ஏலம் விடப்படு கின்றன. அதில் கிடைக்கும் பணம், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். ஏற்கெனவே மூன்று முறை இவ்வாறு ஏலம் நடந்துள்ளது. பரிசுப் பொருள்களுக்கு நூறு ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.1,800 கோடியில் உருவாகும் கோவில்
லக்னோ: அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக அதற்கான அறக்கட் டளை தெரிவித்துள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2023 டிசம்பரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றும் 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின்போது ராமர் கருவறையில் அமர்ந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறக்கட்டளை பொதுச்செயலாளர் கூறினார்.
ரூ.45 லட்சத்துக்கு ஏலம்போன லட்டு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் ஏலம் விடப் படும். இதில் கிடைக்கும் தொகை, கோவில் மேம்பாட்டுப் பணிக்குச் செலவிடப்படும். இம்முறை 12 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டது. அதை வெங்கட ராவ் என்பவர் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

