மும்பை: இந்தியாவின் வாரணாசி நகரில் உள்ள கியான்வாபி பள்ளிவாசலில் வழிபட சில இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்துக்கள் புனிதமாகக் கருதும் வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்ததென்பது அப்பெண்களின் வாதம்.
அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அண்மைக் காலமாக இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் இந்த விவகாரமும் இடம்பெற்றுள்ளது.

