ஜி20 சந்திப்பை நடத்தவுள்ள இந்தியா

ஜி20 சந்திப்பை நடத்தவுள்ள இந்தியா

1 mins read
Google News Preferred Icon

இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் ஜி20 கூட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ளும்.

மேலும், உலகின் ஆகப் பெரிய 20 பொருளியல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள அடுத்த ஆண்டின் ஜி20 சந்திப்பை இந்தியா ஏற்று நடத்தும்.

அந்தச் சந்திப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10ஆம் தேதிகளில் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும்.

இவ்வாண்டுக்கான ஜி20 சந்திப்பை வரும் நவம்பர் மாதம் இந்தோனீசியா ஏற்று நடத்தவுள்ளது.

அதற்குப் பிறகு இந்தோனீசியாவிடமிருந்து ஜி20 தலைமைத்துவப் பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா பெற்றுக்கொள்ளும்.