பேரணியில் பங்கேற்கச் சென்ற பாஜகவினரைத் தடுத்த காவல்துறை: கோல்கத்தாவில் பதற்றம்

பேரணியில் பங்கேற்கச் சென்ற பாஜகவினரைத் தடுத்த காவல்துறை: கோல்கத்தாவில் பதற்றம்

2 mins read
505decd2-aa42-43a1-a6bc-373c6f4f2a12
-
Google News Preferred Icon

கோல்­கத்தா: பாஜக பேர­ணியில் பங்­கேற்­கச் சென்ற கட்­சித் தொண்­டர்­களை காவல்­து­றை­யி­னர் ஆங்­காங்கே தடுத்து நிறுத்­தி­யதை அடுத்து மேற்கு வங்­கத்­தில் பதற்­றம் ஏற்­பட்­டது.

மேற்கு வங்க மாநி­லத்­தில் ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சிக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வித­மாக பாஜக சார்­பில் நேற்று பிரம்­மாண்­டப் பேரணி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, தலை­ந­கர் கோல்­கத்­தா­வில் பாஜக தொண்­டர்­கள் குவி­யத் தொடங்­கி­னர். பல்­வேறு பகு­தி­களில் இருந்து பாஜ­க­வி­னர் ரயில், பேருந்­து­கள் மூலம் கோல்­கத்­தா­வுக்­குச் செல்ல முயன்­ற­னர்.

இந்­நி­லை­யில், பாஜ­க­வி­னரை அடை­யா­ளம் கண்டு காவல்­து­றை­யி­னர் அவர்­களை ஆங்­காங்கே தடுத்து நிறுத்­து­வ­தாக தக­வல் பர­வி­யது. இத­னால் ராணி­கஞ்ச், போல்­பூர், துர்­கா­பூர் உள்­ளிட்ட ரயில் நிலை­யங்­களில் நுழைய பாஜ­க­வி­ன­ருக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இத­னால் ரயில் நிலை­யத்­துக்கு வெளியே பாஜக தொண்­டர்­க­ளுக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே மோதல் வெடித்­தது.

இதை­ய­டுத்து, பாஜ­க­வி­னர் பலர் கைது செய்­யப்­பட்­ட­தாக சமூக ஊட­கங்­களில் தக­வல் பர­வி­யது.

ரயில் மூலம் பாஜக தொண்­டர்­கள் கோல்­கத்­தா­வில் குவிந்­ததை காவல்­து­றை­யி­னர் தடுத்­த­தாகவும் அதன் கார­ண­மாக வேறு வழிகளைப் பயன்­ப­டுத்தி அக்­கட்­சித் தொண்­டர்­கள் கோல்­கத்­தா­வுக்கு வந்து சேர்ந்­த­தா­க­வும் பாஜக மூத்த தலை­வர் அபி­ஜித் தத்தா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கோல்­கத்­தாவின் பல்­வேறு பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­ட­னர். சில இடங்­களில் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் முக்­கிய சாலை­களில் தடுப்பு வேலி­கள் அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் பாஜ­க­வி­னர் தெரி­வித்­த­னர்.

பேரணி வெற்றி பெறு­வ­தைத் தடுப்­ப­தற்­காக காவல்­து­றை­யி­னர் இவ்­வாறு நடந்து கொண்­ட­தாக பாஜக குற்­றம்­சாட்டி உள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ர­சுக்­கும் பாஜ­க­வுக்­கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரு­கிறது.

மாநில ஆளு­ந­ரைக் கொண்டு, தமது தலை­மை­யி­லான அர­சுக்கு தொடர்ந்து மத்­திய அரசு நெருக்­கடி கொடுத்து வரு­வ­தாக முதல்­வர் மம்தா பானர்ஜி குற்­றம்­சாட்டி வரு­கி­றார்.

தமது கட்­சி­யின் முக்­கி­யத் தலை­வர்­க­ளைக் குறி­வைத்து, மத்­திய புல­னாய்வு, விசா­ரணை அமைப்­பு­கள் பொய் வழக்­கு­க­ளைக் கொடுத்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், தனது பலத்தை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் மேற்கு வங்க பாஜக மேற்­கு­றிப்­பிட்ட பேர­ணியை நடத்­தி­யது.