அமைச்சர் மீது காலணி வீச்சு: ராஜஸ்தானில் பரபரப்பு

அமைச்சர் மீது காலணி வீச்சு: ராஜஸ்தானில் பரபரப்பு

1 mins read
30831c49-2256-455e-bd61-5cd2f6d17a66
-

ஜெய்ப்­பூர்: மாநில விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் மீது காலணி வீசப்­பட்­ட­தால் ராஜஸ்­தா­னில் பர­பரப்பு ஏற்­பட்­டது.

மாநில சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் அசோக் சந்த்னா நேற்று முன்­தி­னம் ஜெய்ப்­பூ­ரில் உள்ள புஷ்­கர் மேளா திட­லில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார்.

அமைச்­சர் உரை­யாற்­று­வார் என அறி­விக்­கப்­பட்ட பின்­னர், அவர் ஒலி­பெ­ருக்­கி­யின் அருகே வந்­த­போது, திடீ­ரென அங்கு கூடி­யி­ருந்­த­வர்­களில் சிலர், கால­ணி­களை எடுத்து மேடையை நோக்கி வீசத் தொடங்­கி­னர். சிலர் வேறு பொருள்­க­ளைத் தூக்கி வீசி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் அமைச்­சர் அசோக் சந்த்­னா­வும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­களும் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

கூட்­டத்­தில் இருந்த சிலர் அமைச்­ச­ருக்கு எதி­ராக கண்­டன முழக்­கங்­களும் எழுப்­பி­னர்.

இந்த சம்­ப­வத்­துக்கு எதிர்க்­கட்­சி­கள்­தான் கார­ணம் என பாஜ­க­வி­னர் குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.