ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் உணவு அருந்திய கெஜ்ரிவால்

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் உணவு அருந்திய கெஜ்ரிவால்

1 mins read
d1378db5-6ae2-4b61-9470-b35f6fe9fb6f
கெஜ்ரிவால் தன் வீட்டில் சப்பாத்தி சாப்பிட்டதாகவும் அவரது வருகை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஓட்டுநர் கூறினார். படம்: ஊடகம் -

அக­ம­தா­பாத்: டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் அண்­மை­யில் குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத் நக­ரில் உள்ள ஆட்டோ ஓட்­டு­நர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது ஓர் ஓட்­டு­நர் தாம் முதல்­வ­ரின் தீவிர ரசி­கர் என்­றும் அவர் தன் வீட்­டிற்கு உண­வ­ருந்த வரவேண்­டும் என்­றும் அழைப்பு விடுத்­தார்.

அதை ஏற்­றுக்­கொண்ட கெஜ்­ரி­வால், நேற்று முன்­தி­னம் அக­ம­தா­பாத்­தில் உள்ள ஓட்­டு­ந­ரின் வீட்­டுக்­குச் சென்று அவ­ரு­டன் உண­வ­ருந்­தி­னார். அவ­ரது ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் சில­ரும் உண­வ­ருந்­தி­னர்.

முன்­ன­தாக, பாது­காப்பு கார­ணங்­களை முன்­வைத்து ஆட்டோ ஓட்­டு­நர் வீட்­டுக்கு முதல்­வர் கெஜ்­ரி­வால் செல்­லக்­கூ­டாது என அக­ம­தா­பாத் காவல்­துறை தடுத்து நிறுத்­தி­யது.

ஆனால், தலை­வர்­கள் மக்­க­ளு­டன் கலந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் குஜ­ராத்­தில் அத்­த­கைய நிலை இல்லை என்­றும் கெஜ்­ரி­வால் சாடி­னார். மக்கள் நலனே முக்கியம் என்றும் கூறினார்.

திணிக்­கப்­படும் பாது­காப்பு தனக்­குத் தேவை­யில்லை என்­றும் அவர் திட்­ட­வட்­ட­மாக கூறிய பிறகே, காவல்­துறை அனு­மதி அளித்­தது.