செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e0899dbb-ea7b-444a-a12f-f4ae68cbdcd9
-
Google News Preferred Icon

இந்தியாவில் பிரான்ஸ் அமைச்சர்

புதுடெல்லி: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கோலோனா அதிகாரபூர்வப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்திய வெளியுறவு அமைச்சரை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இரு அமைச்சர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: ஏஎஃப்பி.

2024ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனைப் பயணம்

புதுடெல்லி: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனைப் பயணம், 2024 இறுதியில் மேற்கொள்ளப்படும் என மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், பெண் உருவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள 'வியோம்மித்ரா' என்ற இயந்திர மனிதன் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார்.

உறுப்பு தானம்: மருத்துவர்கள் கருத்து

புதுடெல்லி: இறந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்வது கட்டாயமாக்கப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 17 வயது சிறுவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளான். அதில், கல்லீரல் செயலிழப்பால் 43 வயதான தமது தந்தை உயிருக்குப் போராடி வருவதாகவும் கல்லீரல் தானம் செய்ய தமக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளான். இந்தியாவில் 18 வயது நிரம்பாதவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில், இறந்தவர்களின் உறுப்புகள் வயது வித்தியாசம் இன்றி தானமாக வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.