ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டபோது ஏர் இந்தியா விமானம் ஒன்றின் இயந்திரத்தில் தீ மூண்டதைத் தொடர்ந்து அதில் இருந்த 141 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த போயிங் சிஓ 737-800 ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறப்பதற்காகத் தயாராகும்போது மஸ்கட் நேரப்படி காலை 11.20மணிக்கு அதன் இயந்திரம் ஒன்றிலிருந்து இருந்து புகை வெளியேறத் தொடங்கியது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக அவசர கால வெளியேறும் வழியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தில் 14 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன என்று அறியப்படுகிறது.
அவசரகால சூழ்நிலையைத் தொடர்ந்து மஸ்கட் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) ஆலோசனை நடத்தி வருகிறது.
''மஸ்கட் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் 2-ல் புகை வெளியேறுவதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்,' என்று டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

