செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4ff0e93a-e8e7-4cd1-a5e4-59cfd8d4946e
-

இந்­தியா - பூட்­டான் எல்லை திறப்பு

கோக்­ர­ஜார்: கொரோனா தொற்று கார­ண­மாக இந்­தி­யா­வுக்­கும் பூட்­டா­னுக்­கும் இடை­யே­யான எல்லை நுழை­வா­யில் கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளாக மூடப்­பட்­டி­ருந்­தது. அந்­தப் பாதையை வரும் 23ஆம் தேதி திறப்­ப­தற்கு இரு­நா­டு­களும் இணக்­கம் கண்­டுள்­ளன. சுற்­று­லாப் பய­ணி­கள், வர்த்­த­கம் மற்­றும் அதி­கா­ர­பூர்வ பய­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­காக எல்லை திறக்­கப்­ப­டு­வ­தாக பூட்­டான் அரசு அறி­வித்­துள்­ளது.

தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்: டிரோன்­கள்

வாங்­கு­கிறது விமா­னப்­படை

புது­டெல்லி: ஜம்மு காஷ்­மீ­ரில் உள்ள விமா­னப்­படைத் தளத்­தின் மீது, கடந்­தாண்டு ஜூன் மாதம் இரண்டு டிரோன்­கள் மூலம் தீவி­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர். மிக­வும் பாது­காக்­கப்­பட்ட பகு­தி­யான விமா­னப்­ப­டைத் தளத்­துக்­குள் டிரோன்­கள் மூலம் தீவி­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருப்­பது விமா­னப்­படைக்கு பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது. இந்நி­லை­யில், விமா­னத் தளங்­கள் மீதான டிரோன் தாக்­கு­தல்­களை முறி­ய­டிக்க, ரிமோட் கன்ட்­ரோல் மூலம் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய டிரோன்­களை அதி­க­ளவு வாங்க இந்­திய விமா­னப்­படை முடி­வெ­டுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கட்­டுப்­ப­டி­யா­கும் விலை­யில்

உயிர்­காக்­கும் மருந்­து­கள்

புது­டெல்லி: கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­படும் ஏழை, எளி­ய­வர்­கள் எளி­தில் மருந்­து­களை வாங்­கும் வகை­யில் உயிர்­காக்­கும் மருந்­து­க­ளின் விலை­யைக் கட்­டுப்­ப­டுத்த இந்­திய சுகா­தார அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது. அதன் கார­ண­மாக, தேசிய அத்­தி­யா­வ­சிய மருந்­து­கள் பட்­டி­ய­லில் நோய் எதிர்ப்பு சக்தி மற்­றும் உயிர்­காக்­கும் மருந்­து­கள் சில சேர்க்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் புற்­று­நோய், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்­தி­ரை­கள் உட்­பட பல்­வேறுவித­மான உயிர்­காக்­கும் மருந்­து­க­ளின் விலை குறைக்­கப்­பட உள்­ளது.

உ.பி. சிறு­மி­கள் கொலை; 6 பேர் கைது

லக்­கிம்­பூர்: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் லக்­கிம்­பூ­ரில் பட்­டி­யல் இனத்­தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோ­த­ரி­கள் பாலி­யல் வன்­கொ­டு­மைக்­குட்­ப­டுத்தி, கொலை செய்­யப்­பட்­டுள்ள சம்பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புதன்­கி­ழமை மாலை 17, 15 வய­து­டைய இரண்டு சிறு­மி­கள் மரம் ஒன்­றில் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக 6 பேரை காவல்­துறை கைது செய்­துள்­ளது. இது தொடர்­பாக, சுகைல், ஜூனைத், ஹபி­சுல் ரஹ்­மான், கரி­மு­தீன், ஆரிஃப் மற்­றும் சோட்டு ஆகிய ஆறு பேர் கைதா­கி­யுள்­ள­னர். அவர்­கள் மீது கொலை, காயப்­ப­டுத்­து­தல், வீட்­டில் அத்­து­மீறி நுழை­தல், வன்­பு­ணர்வு ஆகிய பிரி­வு­கள் மற்­றும் போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சம்­ப­வத்­தைக் கண்­டித்து சிறு­மி­க­ளின் குடும்­பத்­தி­னர் மற்­றும் ஊர் மக்­கள், சாலை மறி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்­தக் கொடூ­ரச்­ சம்­ப­வத்­திற்கு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.