குடிகாரர்கள் தொல்லை: பொறுத்ததுபோதும் என பொங்கி எழுந்த கிராமம்

குடிகாரர்கள் தொல்லை: பொறுத்ததுபோதும் என பொங்கி எழுந்த கிராமம்

1 mins read
16e385a3-6a7d-4047-ba6d-99e4408dd362
படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

மது அருந்திவிட்டு தொந்தரவு கொடுத்து வந்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் ஒரு கிராமம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பீகாருக்கு அருகே அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு உள்ள மது கடையில் மது வாங்கி அருந்திவிட்டு கிராமத்துக்குள் அலப்பறைகள் செய்துவந்தனர் வெளியூர்வாசிகள். இதனால் இங்கு அடிக்கடி கைகலப்புகளும் பெண்களை கேலி செய்யும் சம்பவங்களும் நடந்தன. பொறுத்ததுபோதும் என்று பொங்கி எழுந்துள்ளனர் இந்த கிராமவாசிகள். எவருக்கும் இனி மது விற்கப்படாக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த பிரச்சினையால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டதால், அவர்களே காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பாரம்பரிய ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் கிராமத்தை சுற்றிவருகின்றனர். மது குடிப்பதற்காக கிராமத்துக்குள் நுழைபவர்கள் தடுத்த நிறுத்தப்படுகின்றனர். உள்ளூர்வாசிகள் மது போத்தலை கிராமத்துக்குள் கொண்டுவந்தால், காவலில் ஈடுபடும் பெண்களை போத்தல்களை உடைத்துவிடுகின்றனர்.

இப்போது தங்கள் கிராமம் நிம்மதி நிறைந்த ஒரு பூங்காவாக உருமாறியுள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.