செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c4c0be93-9357-4ef0-9e5c-12509e44c33b
-

தெலுங்­கானா தலை­மைச்

செய­ல­கத்­துக்கு அம்­பேத்­க­ரின் பெயர்

ஹைத­ரா­பாத்: இந்­திய சட்­டத்தை இயற்றி, பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த டாக்­டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமைச் செய­ல­கத்­துக்கு சூட்­டப்­படும் என தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் தெரி­வித்­துள்­ளார். அம்­பேத்­க­ரின் அர­சி­யல் சாசன சட்­டப் பிரிவு 3-ன் படியே தெலுங்­கானா மாநி­லம் உரு­வா­னது. இந்த மாநி­லம் உரு­வாக அம்­பேத்­க­ரும் ஒரு கார­ணம். இதே­போல் புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­துக்­கும் டாக்­டர் அம்­பேத்­க­ரின் பெயரைச் சூட்ட வேண்­டும் என்று சந்­தி­ர­சே­கர ராவ் கூறி­னார். தெலுங்­கானா மாநி­லத்­தின் புதிய தலை­மைச் செய­ல­கம் ஹைத­ரா­பாத்­தில் கட்­டப்­பட்டு வரு­கிறது. அப்­ப­ணி­களை நேற்று முதல்­வர் கே.சந்­தி­ர­சே­கர ராவ், பார்­வை­யிட வருகை தந்­த­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

உ.பி.யில் கன­மழை: ராணுவ வளாகச் சுவர் விழுந்து 9 பேர் பலி

லக்னோ: உத்­த­ர பி­ர­தே­சம் மாநி­லத்­தின் லக்­னோ­வில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன­மழை கார­ண­மாக ராணுவ வளாகத்­தின் பாது­காப்­புச் சுவர் இடிந்து விழுந்­தது. இதில்

9 பேர் உயிர் இழந்­த­னர். மேலும் ஒரு­வர் காய­ம­டைந்­துள்­ளார். உயிர் இ­ழந்­த­வர்­க­ளின் குடும்­ப­த்திற்கு தலா ரூ.4 லட்­ச­மும், படு­காயம் அடைந்­த­வ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ. 2 லட்­சம் நிவா­ர­ணமும் வழங்­கப்­படும் என உத்தர பிரதேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் அறி­வித்­துள்­ளார்.

கேர­ளா­வில் ராகுல் காந்­திக்கு

உற்­சாக வர­வேற்பு

திரு­வ­னந்­த­பு­ரம்: ராகுல் காந்தி தொடர்ந்து 9வது நாள் நடைப்ப­ய­ணத்தை காங்­கி­ரஸ் நிர்­வா­கி­கள், தொண்­டர்­க­ளு­டன் நேற்று காலை சுமார் 6.30 மணிக்குத் தொடங்­கி­னார். அதன்­படி கொல்­லம் போள­யத்­தோடு சந்­திப்­பில் இருந்து தொண்­டர்கள் ­புடை­சூழ ராகுல் காந்தி புறப்­பட்­டார். காலை 11 மணி அளவில் கொல்­லம் நீண்­ட­கரை பகு­தி­யில் நடைப் பய­ணத்தை நிறைவு செய்­தார். இந்த நடைப் பய­ணத்­தின்­போது சாலை­களின் இரு பக்­க­மும் திரண்ட காங்­கி­ரஸ் நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் ராகுல் காந்­திக்கு உற்­சாக வர­வேற்பு அளித்­தனர். ராகுல்­ காந்­தி­யின் நேற்­றைய 9வது நாள் நடைப் பயணத்­தில் சத்­தீஸ்­கர் மாநில முதல்­வர் பூபேஷ் பாகெ­லும் பங்­கேற்­றார்.

குலாம் நபி ஆசாத்­திற்கு மிரட்­டல்

அனந்த்­நாக்: ஜம்மு காஷ்­மீ­ரில் பொதுக்­கூட்­டம் ஒன்­றில் பேசிய குலாம் நபி ஆசாத், தீவி­ர­வா­தக் குழுக்­கள் ஆயு­தங்­களைக் கைவிட வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­தார். இத­னைத் தொடர்ந்து, அவர் பாஜ­க­விற்­காக செயல்­படும் துரோ­கி­யாக மாறி­விட்­டார் என்று குற்­றம்­சாட்­டி­யுள்ள தீவி­ர­வாதக் குழு ஒன்று குலாம் நபி ஆசாத்­திற்குக் கொலை மிரட்ட­லும் விடுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.